Friday 11 April 2014

சரித்திரம் செய்

இளைஞனே……..! 

இன்னும் என்ன உறக்கம்?
எதற்காக இந்த தயக்கம்?

உன்னை அறி
அறிதலில் தொடங்கி
உற்சாகத்தின் உன்னதத்தில் முடி.

எதிர்மறை சிந்தித்தலில்
நேர்மறை சிந்தனைகளை தொலைக்காது
உன் சிறகுகளை அகல விறி.

எதையாவது
செய்வதை விடுத்து
எதைச் செய்வது என திட்டமிடு.

சந்தர்ப்பங்களுக்காக
காத்திருப்பதை விடுத்து
சகலத்தையும் சந்தர்ப்பங்களாக்கு.

தோல்விகளைக் கண்டு
துவளாமல் – அதன்
வலிகளை தோள் வரை வை.

விழுந்ததற்காக அழாதே
எழுவதற்காக
விழப்பழகு.

வெற்றியின் தாகத்தோடு இரு
தாகத்தோடு வேகமாய்
வேகத்தோடு விவேகமாய் செயல்படு.

ஆரியக்கூத்தாடும்
கலைக் கூத்தாடியாய்
காரியம் செய்யும் ரெளத்ரம் பழகு.

பொழுது போக்கு கழுகுகளுக்கு
நேர மாமிசங்களை போடாமல்
காலத்தே நின்று காரியம் செய்.

சாதித்தவர்களின் சரித்திரம் படித்து
உனக்கென தனியே செய்
ஒரு சரித்திரம்”.

நன்றி : செம்பருத்தி