Wednesday 10 October 2012

இளம் துளிர் பகத்சிங்

தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய வம்சத்தின் மூன்றாம் தலைமுறையில் உதித்த புரட்சிவீரன் பகத்சிங். ஆங்கிலேய அரசை கதிகலங்கச் செய்த பகத்சிங்கின் நடவடிக்கைகள், லாகூர் சதிவழக்கு, டெல்லி சட்டசபையில் குண்டுவீசித் தாக்கிய வழக்கு ஆகியவற்றில் ஆங்கிலேய அரசின் சூழ்ச்சி என பல சம்பவங்கள் கண்முன்னே காட்சியாக பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இந்நூலாசிரியர். சுதந்திரம், விடுதலை என்ற வார்த்தைகளின் மகிமை தெரியாதவர்களுக்கும் கூட, இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று பல புரட்சியளர்கள், தேசபக்த வீரர்களின் மூச்சுக்காற்றை காணிக்கையாக்கிப் பெற்றது என்பதை உணர்ச்சி பூர்வமாகச் சொல்லி தேசபற்றை ஊட்டுகிறது இந்நூல்.
விகடன் பிரசுரம்