Saturday 6 September 2014

சின்ன வித்தியாசத்தில் அர்த்தப்படும் வாழ்க்கை!

ஆசிரியர் தினத்தில் உன் மிஸ்க்கு என்ன கொடுத்தாய்? என்று மகனிடம் கேட்டேன்.

நானே செஞ்சிட்டுப் போன கிரிட்டிங்கார்டோடு ஒரு சாக்லெட்டும் சேர்த்து கொடுத்தேன் என்றான். அதன் பின் அவன் சொன்ன விசயம் தான் அற்புதம். உன் பிரண்ட்ஸ்லாம் மிஸ்க்கு என்ன கொடுத்தாங்க? என்றேன்.  

என் பிரண்ட் எதுவும் கொண்டுவரல. நான் கொடுத்ததை பார்த்துட்டு அவனும் கொடுக்கனும்னு சொன்னான். மிஸ்க்கு கொடுத்தது போக எனக்கிட்ட இருந்த ஒரு சாக்லெட்டை அவனுக்கு கொடுத்தேன். அந்த சாக்லெட்டோட ஒரு அட்டையில கிரிட்டிங் எழுதி அவனும் மிஸ்க்கு கொடுத்தான் என்றான்.

குழந்தைகள் தன்னிடமிருப்பதை பகிர்ந்து கொடுத்து சந்தோசமடைகிறார்கள். வளர்ந்த நாமோ அடுத்தவர்களுக்குரியதை பறித்துக் கொண்டு சந்தோசமடைகிறோம். இந்த சின்ன வித்தியாசத்தில் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் அர்த்தப்படுகிறது.