Tuesday 9 December 2014

விதியும், மதியும்

மாற்ற முடியாத விசயங்களுக்காக மனதை அலட்டிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்கள் பலர். அவர்களின் பிரச்சனைகளை வைத்து ஒரு புத்தகமே போடலாம். தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளிவராத வரை அவர்களுக்கு எட்டா உயரத்தில் தான் வெற்றி இருக்கும்.

மாற்ற முடியாத விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, மாற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவது என்ற இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றி விட முடியும்.

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர்கள் அப்படியான எதார்த்த நிகழ்வுகளைவிதிஎன்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலயேவிதியை மாற்ற முடியும்எனச் சொல்லாமல்விதியை மதியால் வெல்லலாம்எனச் சொல்லித் தந்தனர்.

இஸ்லாமிய கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியை சந்தித்த யூத இளைஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டான். ஹஜ்ரத் அலி அவனிடம், “உன் வலதுகாலை தூக்குஎன்றார். அவனும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றான்.

சரி…..இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்குஎன்றார்.

அது எப்படி முடியும்?” என்றான் இளைஞன்.

ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்து செய்தாய் அல்லவா? அது தான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்ன போது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அதுதான் விதிஎன்றார். அந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும்.

விதியை மதியால் வெல்லுங்கள். வாழ்வு வசப்படும். மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்.

நன்றி : தி இந்து நாளிதழ்