Monday 26 January 2015

ரசிக்க – சிந்திக்க -1

\

இக்கால தெருவிளக்கின் தந்தை, மின்னலுக்கும், மின்சாரத்திற்கும் ஒரே தன்மை இருப்பதைக் கண்டுபிடித்தவர், மூக்குக் கண்ணாடியின் தந்தை, சூட்டடுப்பை கண்டுபிடித்தவர், அசைந்தாடும் நாற்காலியை கண்டுபிடித்தவர் இப்படி பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்கிளின் ஓர் இலக்கியக் கூட்டத்திற்காக பாரீஸ் நகருக்கு சென்றிருந்தார். அந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட தொடக்க உரையைக் கேட்டு மக்கள் அவ்வப்போது கைதட்டிய வண்ணமிருந்தனர். பிராங்கிளினுக்கு பிரெஞ்சு மொழி தெரியாததால் எந்த இடத்தில் கை தட்ட வேண்டும் என புரியவில்லை. அதேநேரம் எல்லோரும் கை தட்டும் போது தான் மட்டும் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கவும் அவருக்கு விருப்பமில்லை. எனவே அவருக்குத் தெரிந்த பெளலர் என்கிற அம்மையாரைப் பார்த்து அவர் கைதட்டும் பொழுதெல்லாம் தானும் கைதட்டினார்.

உரை முடிந்ததும் அவருடைய பேரன் அவரிடம், “ தாத்தா உங்களைப் பற்றி புகழ்ந்து சொன்ன போதெல்லாம் மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் தான் வேகமாக கைதட்டினீர்கள்என்று சொன்னான். அப்போது தான் அவருக்குத் தான் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான காரியத்தை செய்திருக்கிறோம் என்பது புரிந்தது

மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களைப் போலவே நாமும் செய்யக்கூடாது. ஒன்றைச் செய்வதற்கு முன் எதற்காக செய்கிறோம்? அப்படி செய்வது சரியா? என தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பெஞ்சமின் பிராங்கிளின் பேரன் அவரைக் கேலி செய்ததைப் போல மற்றவர்கள் உங்கள் செயலைப் பார்த்து கேலி பேசுவார்கள்

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்