Wednesday 27 April 2016

தேவதைகளின் அட்டகாசம் - 5

நான் பாத்ரூமில் குளிக்கனும். நீ வெளியே உள்ள பாத் டேப்பில் (BATH TAP) குளின்னு சொன்னேன். அவன் அதெல்லாம் முடியாது. பாத்ரூமில் தான் குளிப்பேன்னு சொன்னான்.

ம்.....

 
போடான்னு திட்டினேன்

ம்....

 

அதுக்கு அவன் என்னவோ சொல்ல நான்ஒன் தலன்னேன்.

ம்.....

உடனேபன்னாடைன்னு ரொம்ப அசிங்கமா சொல்றான் டாடி.

ம்.....

 

என்ன......ம்...ம்...ன்னு. நான் என்ன கதையா சொல்றேன்?


அதுக்கு நான் என்ன செய்யனும்?


அவனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசக்கூடாது. அசிங்கமான வார்த்தையெல்லாம் சொல்லாதேன்னு சொல்லுங்க.

.
சரி...அவனைக் கூப்பிடு.


ஏன்டா...இலக்கியா பிள்ளையத் திட்டுறே?

அதை மட்டுந் தான் உங்கள்ட்டச் சொல்லுச்சா. அது சொன்னதை எல்லாம் சொல்லி இருக்காதே! என்னைய என்ன, என்ன சொன்னுச்சுன்னு தெரியுமா

சரி...சரி...உங்க பஞ்சாயத்தை அப்புறமா வச்சுக்கலாம். வேன் வந்துடும். ஸ்கூலுக்குக் கிளம்புங்க. சாயங்காலம் பேசி முடிவு செய்துக்கிடலாம்.