Tuesday 15 November 2016

தேவதைகளின் அட்டகாசம் - 11

ஏன் இப்படி இளைக்கிற?

ஸ்கூல்ல என்னையும், என் ஃப்ரண்டையும் டான்ஸ்க்குச் சேர்த்திருக்காங்க டாடி. ஆனா, முதல்ல ஆடிக்காட்டனும்னு மேடம் சொல்லியிருக்காங்க. அதுனால டான்ஸ் ப்ராக்டிஸ் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

அக்காக்கிட்ட கேட்டா அது சொல்லித் தரும்ல.

அது சொல்லித் தருகிற மாதிரி எல்லாம் ஆட முடியாது டாடி

ஏன்?

அது ஹிப்பை (HIP) வேக, வேகமா ஆட்டி டான்ஸ் ஆடுது. இலக்கியா ஒன்னும் திங்காமல் ஒல்லிக்குச்சியா இருக்குறதால அப்படி ஆட முடியுது. என்னால அப்படி ஆட முடியல.

வேற மாதிரி மூவ்மெண்ட்ஸ் கேட்க வேண்டியது தானே?

அதெல்லாம் சரியா வராது டாடி. ஆம்பளப்பசங்க ஆடுற மாதிரியான மூவ்மெண்ட்ஸ் பார்த்து நானே ஆடிக்கிறேன்.