Saturday 14 April 2018

ஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை

சில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஏன்? என்றேன்.

தமிழ் புத்தாண்டு வரை காத்திருங்கள் என்றான்.

இன்று காலையில் என்னோடு மகளையும், மனைவியையும்  ஓரிடத்தில் நிற்க வைத்தான். அழகாக பேக் செய்யப்பட்ட கிஃப்டைக் கொடுத்தான்.

பிரித்து பார்த்த போது மூன்று ரோஜாக்களை ஒரு பொம்மை தன் தலையில் தாங்கிய படி இருந்தது.

இதுக்கு என்ன அர்த்தம் என எதார்த்தமாய் கேட்டேன்

அதற்கு அவன் சொன்ன பதில்தான் இன்றைய காலையை இன்னும் சுகமாக்கித் தந்தது.

"நீங்கள், அம்மா, இலக்கியா மூவரும் தான் மூனு ரோஜா. அந்த பொம்மை தான் நான். நீங்கள் மூனு பேரும் உங்க கஷ்டத்தை எனக்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். அதை சொல்லத் தான் இந்த கிஃப்ட்" என்றான்.

இதற்குப் பிறகு எதுக்கு கோயிலுக்கு போகனும்?

2 comments:

  1. சரி தான்...

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஸூப்பர் இதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

    ReplyDelete